காஸாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் குண்டுவீச்சு
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.
கடந்த மாதம் 10-ந் தேதி இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இந்த சண்டை இடைவிடாமல் 11 நாட்களுக்கு தொடர்ந்தது. அதில் பலர் இறந்தனர் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார்கள் .
மேலும் கடந்த மாதம் 21-ந் தேதி இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இதனால் காசாவில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருந்தது. மேலும் இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது
இந்தநிலையில் நேற்று அதிகாலை காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.இஸ்ரேல் போர் விமானங்கள் 10 நிமிடங்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஹமாஸ் இஸ்ரேலின் தெற்கு நகரங்களை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்க விட்டனர்.இந்த பலூன்கள் தரையில் விழுந்து வெடித்ததில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றார்கள் .
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பெரிய மோதல் இதுவாகும். இதனால் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
Source:
Tags: வெளிநாட்டு செய்திகள்