Breaking News

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை..!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதியுடன் தளர்வுடன் கூடிய ஊரடங்கு காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.


அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதனால், ஜூன் 14 ஆம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் 21-ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது.மேலும் புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பு வெளியிடுவார் என கூறப்படுகிறது.

Give Us Your Feedback