புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14 ம் தேதிவரை நீடிப்பு
புதுச்சேரியில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகளும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன் படி ஜூன் 14 ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்லது
அதன்படி புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யலாம்.
அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
பெரிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாலை 5 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படலாம்.
அனைத்து வழிபாட்டு தலங்களும் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாராயம், கள், மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாராயம், கள், மதுக்கடைகள் செயல்படலாம்.
Tags: தமிழக செய்திகள்