Breaking News

அமெரிக்காவில் கோர விபத்து 12 மாடி கட்டிடம் இடிந்து விபத்து நேரடி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் உள்ள மியாமி கடற்கரை அருகே  இன்று அதிகாலை 12 மாடி குடியிருப்பு கட்டிடம்  இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்துவிட்டனர், மேலும் 99 பேர் காணவில்லை என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன

மியாமி கடற்கரைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ள சிறிய, கடற்கரை நகரமான சர்ப்சைடில் உள்ள சாம்ப்லைன் டவர்ஸ் அதிகாலை 1:30 மணியளவில் இடிந்து விழுந்தது

தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதுவரை, கட்டிடத்தில் சிக்கிய 37 பேரை  மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback