Breaking News

”MLA வாக” மீண்டும் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் மம்தா?

அட்மின் மீடியா
0

மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே.வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த சுவந்து அதிகாரி என்பவர் போட்டியிட்டார். 

இறுதியில் மம்தா பானர்ஜி தோல்வியுற்றதாக அறிவிக்கபட்டது ஆனாலும் இந்த தேர்தலில் மம்தாவின் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக மம்தா பொறுப்பேற்று கொண்டார்

ஆனால் அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருப்பினும் அவர் ஆறு மாத காலத்திற்குள் எம்.எல்,ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது சட்டவிதி

இந்நிலையில் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் மம்தா போட்டியிட்டு வென்ற பவானிப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோவந்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.இதையடுத்து, பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this