Breaking News

இதுதான் இந்தியா: புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த மேஜர் மனைவி ராணுவ அதிகாரியாக பதவி ஏற்பு

அட்மின் மீடியா
0

இந்திய ராணுவ அதிகாரியான மேஜர் விபுதி ஷங்கர் தவுன்டியால் என்பவர் 2019-ம் ஆண்டு காஷ்மீர் மாவட்டம் புல்வாமா நகரில் நடைபெற்ற தீவீரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.  2018-ம் ஆண்டுதான் இவருக்கும் நித்திகா கவுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.



நித்திகா கவுல்திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் தன் கணவரை இழந்தபோது வீட்டில் அப்படியே முடங்கி போகவில்லை

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்த நித்திகா இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் அதிகாரியாக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து நிகில் கவுல் கூறியதாவது:- ஜம்மு- காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீரமரணம் அடைந்த என்னுடைய கணவர் விபூதி சங்கர் அவர்களை பின்பற்றி இந்திய ராணுவத்தில் இணைந்து உள்ளேன். தேசத்துக்காக என்னுடைய கணவர் விட்டுச்சென்ற பணியை நான் வெற்றிகரமாகத் தொடருவேன். என கூறினார்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback