இனி தான் ஆட்டம் ஆரம்பம் ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை "முழு வலிமையுடன் தொடரும்" என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டு வரும் வரை நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு சிறிது காலம் ஆகும்" என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உடனடியாக மோதலை நிறுத்தும் முயற்சியில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐநா பொதுச் செயலர் ஆண்டானியோ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் சண்டையை நிறுத்தும் முயற்சி தீவிரமடைய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்