Breaking News

கொரானாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம். முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு



கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து வழங்கப்படும். 

பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback