FACT CHECK: கருமிளகு, இஞ்சி, தேன் கொதிக்கவைத்து குடித்தால் கொரானா வராது என்ற செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மீண்டும் உலகை ஆளபோகும் தமிழினம் கருமிளகு, இஞ்சி, தேன் மூன்றையும் தண்ணீரில் கொதிக்கவைத்து குடித்தால் கொரானா வராது என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
கருமிளகு, இஞ்சி, தேன் கலவையின் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்று இல்லை என்பதுதான் உண்மை
அந்த கலவை உடலுக்கு நல்லதுதான், ஆனால் கொரானாவை வரவிடாமல் தடுக்காது, என்பதுதான் உண்மை
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் PIB FACT CHECK இந்த தகவல் பொய்யானது என்றும் யாரும் நம்பாதீர்கள் என்றும் அறிவியல் பூர்வ சான்று இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
கருமிளகு, இஞ்சி, தேன் கலவையின் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்று இல்லை.#IndiaFightsCOVID19 pic.twitter.com/wn0VjZTWld
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) April 29, 2021
Tags: FACT CHECK மறுப்பு செய்தி