ஞானவாபி மசூதி பகுதியில் கோயில் இருந்ததா?! - தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
ஞானவாபி மசூதி பகுதியில் கோயில் இருந்ததா?! - தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துவிட்டு முகலாய பேரரசர் அவுரங்கசிப் மசூதியை கட்டியதாக குற்றம்சாட்டி வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர் கடந்த 1991 ஆண்டு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவந்தது
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று 08.04.2021 அன்று நீதிமன்ற அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது அப்போது வழக்கை விசாரித்த சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி அவர்கள்
ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் ஏற்கனவே இந்து கோயில் இருந்ததா அல்லது வேறு ஏதாவது மற்றங்கள் செய்யப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து உண்மை அறிய இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, உத்திரப்பிரதேச அரசு ஆய்வு நடத்த வேண்டும். அந்த குழுவில் குறைந்தது இரண்டு நபர்களாவது சிறுபான்மையினராக இருத்தல் வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்