ஞாயிற்றுக்கிழமை அன்று தொழுகையை வீடுகளிலேயே நிறைவேற்றிக்கொள்ளவும்: ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஞாயிற்றுக்கிழமை அன்று தொழுகையை வீடுகளிலேயே நிறைவேற்றிக்கொள்ளவும்:
ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு
கண்ணியத்திற்குரிய பெருமக்களுக்கும் ஆலிம்களுக்கும்,ஜமாஅத்துக்களின் நிர்வாகப்பெருமக்களும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கொரோனா பரவலை முன்னிட்டு தமிழக அரசு இன்று முதல் 20.10.2021 இரவு நேர ஊரடங்கையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. ஆகவே
தொழுகையாளிகள் இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப வசதியாக தராவீஹ் தொழுகையை 9:40 மணிக்குள் நிறைவு செய்யவும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து தொழுகைகளையும் வீடுகளிலேயே நிறைவேற்றிக்கொள்ளவும்.
அத்துடன் அனைத்து தொழுகைகள் மற்றும் நோன்பு திறப்பு கஞ்சி விநியோகம் செய்கிற சந்தர்ப்பங்களிலும் அரசு அறிவுறுத்தியுள்ள முன்னெச்சரிக்கை நடை முறைகளை உறுதியாக கடைபிடிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொள்கிறது.
அல்லாஹ் புனித ரமலானின் சகல பாக்கியங்களையும் நிறைவாக பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பானாக! இந்தக் கொடிய நோய்த்தொற்றிலிருந்து நம்மையும் உலக மனித சமுதாயத்தையும் பாதுகாத்தருள்வானாக | வஸ்ஸலாம்
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி