Breaking News

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்வதில் சிக்கல்

அட்மின் மீடியா
0

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி  முன்பதிவு செய்வதில் சிக்கல் ஓடிபி பெறுவதில் சிக்கல்



மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என மத்திய அரசு அறிவித்த இன்று 28.04.2021 மாலை 4 மணிமுதல் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவித்தது இந்நிலையில் நாடு முழுவது பலரும் இன்று ஒரே நேரத்தில் பலரும் முயற்சி செய்ததால் அரசு இணையதளம் https://www.cowin.gov.in/home முடங்கியது .


பலரும் ஒரே நேரத்தில் முயற்ச்சி செய்ததால்  ஓடிபி வராமல் சர்வர் முடங்கியது,  மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம், நேரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் பலரும் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், புகார் தொடர்பாக ஆரோக்ய சேது செயலி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

அரசு, தனியார் மையங்கள் தடுப்பூசிக்கான இடம் மற்றும் நேரப் பட்டியலை தயாரித்த பிறகே முன் பதிவு செய்தோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 

Tags: கருத்து கணிப்பு

Give Us Your Feedback