திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் ஓதுக்கீடு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூரில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை க்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியை எங்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.
நாங்கள் திமுகவிடம் கேட்ட 3 தோகுதிகளில் கடையநல்லூர் தொகுதி மட்டும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகள் பற்றி அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கு பின் இன்று மாலை தெரிய வரும் என்று கூறினார்
திமுக கூட்டணியில் இந்திய முஸ்லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்லது அந்த 3 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியும் என்பது குறிப்பிடதக்கது
Tags: தமிழக செய்திகள்