Breaking News

உரிய ஆதாரத்தைக் காட்டி 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

 உரிய ஆதாரத்தைக் காட்டி 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு



சட்டமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் பணம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகக் கொண்டுசெல்ல அனுமதிக்கக் கோரி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு  நேற்று மாண்புமிகு  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்களின் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆதாரங்களைக் காட்டி, கூடுதல் பணத்தை எடுத்துச் செல்லலாம் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்பு நீதிபதிகள் அளித்த உத்தரவில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம், சோதனைகள் நடத்தலாம் எனவும்,  உரிய ஆதாரங்களைக் காட்டி, 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம் எனவும், ஆதாரங்கள் காட்டாவிட்டால் பணத்தைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback