மேற்குவங்கம் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் 42 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளித்த மம்தா பானர்ஜி
மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனால் மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க இருகட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் 50 பெண்கள், 42 இஸ்லாமியமர்கள், 79 தாழ்த்தப்பட்டோர் மற்றும் 17 பழங்குடியின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிடு செய்யபட்டுள்ளது
மேற்குவங்கத்தில் உள்ள நந்திகிராம் என்ற தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்