Breaking News

TNBudget2021Live: தமிழக இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள். முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

 

 

 

சட்டப்பேரவையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. 

                                       

 

 

  •  6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம்!

 

  • வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை



3,016 கோடி செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் அளிக்கப்படும்.


ரூ.144.33 கோடி நிதியில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன


பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70 ஆயிரமாக உயர்வு


மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு


 கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்


சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவுபெறும்


திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.


 திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது


தலைவாசலில் அமைக்கப்படும் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவுக்கு கூடுதலாக ரூ.634.87 கோடி நிதி ஒதுக்கீடு


இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு



மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது


அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டு தொகை 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு; குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 10லட்சம் காப்பீட்டு தொகை


இளைஞர்கள் நலனுக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு


தமிழக காவல்துறையை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback