நாளை முதல் FasTag கட்டாயம் எப்படி வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது?
அட்மின் மீடியா
0
இன்று நள்ளிரவு முதல் அனைத்து டோல்கேட்களில் பாஸ்ட் டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் நீங்கள் பாஸ்டேக் இல்லாமல் சுங்க கட்டணம் செலுத்தினால் இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது
புதிய பாஸ்டேக் வாங்குவது எப்படி?
புதிய வாகனம் வாங்கும்போது, ஷோரூமிலேயே பாஸ்ட்டேக் வழங்கப்படுகின்றது
ஆனால் பழைய வாகனங்களுக்கு டோல் பிளாசாஸில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் இடங்களில் புதிய பாஸ்டேக்கை வாங்கலாம்.
மேலும்
சிண்டிகேட் வங்கி
ஆக்சிஸ் வங்கி
ஐடிஎப்சி வங்கி
எச்.டி.எஃப்.சி வங்கி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் பேடிஎம் மூலம் நீங்கள் பாஸ்ட் டேக் வாங்கி கொள்ளலாம்
பாஸ்டேக் வாங்க என்ன என்ன ஆவணங்கள் தேவை?
வாகனத்தின் பதிவு சான்றிதழ்
வாகன உரிமையாளரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
ஓட்டுநர் உரிமம்,
பான் கார்டு,
பாஸ்போர்ட்,
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை
இவற்றில் ஏதேனும் ஒன்று கொடுத்து பாஸ்டேக் பெற்றுகொள்ளலாம்
அல்லது
அனைத்து சுங்கச்சாவடி மையங்களிலும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் காரில் ஒட்டவேண்டிய ஸ்டிக்கர் வீட்டிற்குத் தபாலில் வந்துவிடும். பின்னர் சிம்-கார்டுக்கு ரீசார்ஜ் செய்வது போலச் செய்ய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருந்தால், ஒவ்வொன்றுக்கும் எனத் தனித்தனியாக ஃபாஸ்டேக் அட்டைகளைப் பெற வேண்டும்
Tags: முக்கிய செய்தி