மின்சார ரயில் பயணச்சீட்டை யூ.டி.எஸ் ஆப் மூலம் எடுக்கலாம் தெற்கு ரயில்வே
புறநகா் மின்சார ரயில் பயணச்சீட்டை யூ.டி.எஸ். செயலி மூலம் திங்கள்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தென்னக ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மின்சார ரயில்களில் பயணிப்போா் பயணச்சீட்டு வாங்குவதற்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு, ‘யூ.டி.எஸ்.’ என்ற ஆப் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி இன்று (பிப்.1) முதல் மீண்டும் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தப் பயணச்சீட்டுகளை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணிவரையிலும், பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
தென்னக ரயில்வே அறிவிப்பு
https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=9800&id=0,4,268
Tags: தமிழக செய்திகள்