புதுச்சேரி அரசியல் இன்று வாக்கெடுப்பு: நாராயணசாமி அரசு தப்பிக்குமா? - கட்சி வாரியாக எம்.எல்.ஏக்களின் தற்போதைய பலம் ஒரு பார்வை
2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 30 சட்டசபை தொகுதிகளை கொண்ட புதுவையில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றது.
அது போல் என் ஆர் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மாகே தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்
இதுவரை மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என கூறப்படுகின்றது
தற்போது ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் - கட்சியில் தற்போது 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2016 தேர்தலில் 15 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
அதில் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவரது பதவி கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது.
திமுக - 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.
நியமன எம்.எல்.ஏக்கள் - 3 பேர்
சுயேட்சை - 1
மாகே தொகுதியில் கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை உறுப்பினர் ராமச்சந்திரன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.
என்.ஆர். காங்கிரஸ் - 7 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.
அதிமுக - 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.
புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் சூழலில், 15 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அவருடைய ஆட்சியை தப்பிக்கும் என்பதும் இல்லையேல் ஆட்சி கவிழும் என்றும் கூறப்படுகிறது
இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மேலும்,சட்டப்பேரவை கூடுவதற்கு முன் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்