இனி வீடு தேடி தபால் மூலம் வரும் வாக்காளர் அடையாள அட்டை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் முதலாவது முறையாக வாக்களிப்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக வழங்க, அஞ்சல் துறையுடன் 5 ஆண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
முதல் முறை வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை, இலவசமாக அஞ்சல் துறைமூலம் விரைவு அஞ்சலில் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். இதற்காக 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்