வேட்பாளர்களுக்கான கட்டுபாடுகள் முழு விவரம் தேர்தல் ஆணையம்!
அட்மின் மீடியா
0
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குபதிவு தொடங்கும் என்றும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதிக்கபட்டுள்ளது
வேட்பாளருக்கான கட்டுபாடுகள்
- இந்நிலையில் சட்டசபை தேர்தலில் எந்த ஒரு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும். அதற்கு மேல் அவருடன் ஆட்கள் வரக்கூடாது
- இதேபோல் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி. கூடுதல் வாகனங்கள் கொண்டு செல்லக் கூடாது.
- வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்: அதற்கு மேல் கூட்டம் கூடக்கூடாது
- வேட்பாளர் தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதிகட்டுள்ளது.
- வேட்பாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பிரசாரம் செய்ய வேண்டும் என்று சுனில் அரோரா தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்