Breaking News

பஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது : பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறி உள்ளனர்.


 

நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்துக்கு ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் நாளை பணிக்கு வர வேண்டும் என்றும் மாற்று ஓய்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். 

மேலும் நாளை விடுப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் விடுப்பு அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.

மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. அண்ணா தொழிற்சங்கம், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback