Breaking News

7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா - தினகரன் அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா - தினகரன்! 



சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தற்போது உடல்நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தல் காரணமாக பெங்களூர் பண்ணை வீட்டில் ஓய்வில் உள்ளார். 

இந்நிலையில் தனிமைப்படுத்தல் முடிந்து பிப்ரவரி 7ம் தேதி அவர் தமிழகம் புறப்படுவதாக டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது பெங்களூருவில் இருந்து சசிகலா வரும்7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி தமிழகம் வருவதாக சற்றுமுன் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் 

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம்! 

ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம்!' என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback