வன்னியா்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை 26 ம்தேதி சட்ட மசோதா பேரவையில் கல்வி, அரசுப் பணிகளில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. .
இம்மசோதாவின் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடும், சீா்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடும், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்ப்டும் என அறிவிக்கப்பட்டது
தற்போது வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். உள் இட ஒதுக்கீடு மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்