#BREAKING: ஜனவரி 11 வரை 50 % இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் இயங்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.!
ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று முத்துக்குமார், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன் இன்று (08/01/2021) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன்தான் திரையரங்குகள் இயங்க வேண்டும் எனவும் மேலும் திரையரங்குகளில் 100% இருக்ககைகளை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1
00% இருக்கை விவகாரத்தை தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடுவெடுக்கும் என நம்புகிறோம் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை குறிப்பிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்