Breaking News

துபாய் நாட்டில் இனி வெளிநாட்டு மக்களும் அமீரக குடியுரிமை பெறலாம்: யாருக்கெல்லாம் வழங்கப்படும்? என்னென்ன விதிமுறைகள்?

அட்மின் மீடியா
0
முதன்முறையாக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்யபட்டுள்ளதாக       ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமர் ஷேக் முகமது பின் ராஷேத் அல் மக்தூம் அறிவித்துள்ளார்


 
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க புதிய சட்ட திருத்தம் குறித்த அறிவிப்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று  அறிவித்துள்ளார்.
 
யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும்

 
சிறந்த முதலீட்டாளர்கள், 
 
மருத்துவ வல்லுநர்கள், 
 
பொறியாளர்கள், 
 
தொழில் வல்லுநர்கள்
 
கலைஞர்கள், 
 
ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்டவர்கள் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் என்றும் அறிவித்துள்ளார்!
 

அதிகாரபூர்வ அறிவிப்பு


இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவதுபுதிய வழிமுறைகள் எங்கள் வளர்ச்சி பயணத்திற்கு பங்களிக்கும் திறமைகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
 
 
 
 



குடியுரிமை வழங்கப்படும் முறை

ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள ஆட்சியாளர்களின் நீதிமன்றம், பட்டத்து இளவரசர்களின் நீதிமன்றம், எமிரேட்டின் நிர்வாக சபை அல்லது கேபினெட் மேற்கொள்ளும்.


நிபந்தனைகள் என்ன

மேலும் இந்தப் புதிய சட்டம், குடியுரிமை வழங்குவதற்கான விதிமுறை மற்றும் நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது. 

அமீரகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் நாட்டின் சட்டங்களை நிலைநிறுத்துவேன் எனவும் அவற்றை மதித்து செயல்படுவேன் எனவும் உறுதிமொழி அளித்தல், 

மேலும் வேறு நாட்டில் புதிதாக குடியுரிமை ஒன்றினைப் பெற்றால் சம்பந்தப்பட்ட அமீரக துறையிடம் தெரிவிப்பேன் என்று உறுதி மொழி அளிக்கவேண்டும்

மேலும் அமீரக சட்ட ஒருமைப்பாட்டை மீறுதல் மற்றும் மேற்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும் பட்சத்தில் புதிதாக வழங்கப்படும் இந்த குடியுரிமையானது பறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback