தமிழக அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? முழு விவரம்
அட்மின் மீடியா
0
அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்!
நம் பெயர் மாற்றம் நான்கு வழிகளில் உள்ளது
- நம்வீட்டில் நமக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள், நாம் விரும்புவதுவேறு பெயராக இருக்கும். இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டுபோவோரும் உண்டு. பெற்றோர் வைத்த பெயரை சிலர் மாற்றநினைப்பதும் உண்டு அப்படி மாற்ற வேண்டும் என்றால் அரசிதழில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
- அதே போல் நம் பெயர் சில ஆவணங்களில் தவறாக இருந்தால் அதனை திருத்தம் செய்ய அரசிதழில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
- அதே போல் நாம் நம் பெயரை மாற்றி வைத்துகொண்டாலோ அதனை அரசிதழில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
- அதே போல் சிலர் மதம் மாறி இருப்பார்கள் அவர்கள் தங்கள் பெயரை மாற்ற அரசிதழில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள் என்ன?
- தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபர்க்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால்,பதிவுபெற்ற ஒரு மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப்பெற்று இணைக்க வேண்டும்.
- 18 வயது நிரம்பியவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம்.
- 18 வயது நிரம்பாதவர்கள் பெற்றோர், பாதுகாவலர் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு சான்றிதழ் அல்லது கல்விச் சான்றிதழ் நகல்
பிறப்பு அல்லது கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் வயதுச் சான்றிதழ் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படம்
வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை
ரேசன் கார்டு
மதம் மாறியவர்கள் வைக்க வேண்டிய ஆவணம்
இந்து மதம்:
ஆர்ய சமாஜம், விஸ்வஹிந்து பரிஷத், இதர அங்கீகரிக்கப்பட்ட மடங்கள், ஆதீனங்களின் இந்து குருமார்கள் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் மத மாற்றச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
கிறித்துவ மதம்:
போதகர், தலைமை போதகர், பேராயர் மற்றும் தகுதி பெற்ற மத குருமார்கள்.இவர்களில் யாரேனும் ஒருவரிடம் மத மாற்றச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
இஸ்லாம் மதம்:
இமாம், காஜி, முத்தவல்லி, மற்றும் தகுதி பெற்ற மத குருமார்கள்.இவர்களில் யாரேனும் ஒருவரிடம் மத மாற்றச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
பெயர் மாற்றம் செய்ய கட்டணம் எவ்வளவு?
ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.415 மட்டும். தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல்கட்டணம் ரூ.65. எப்படிச் செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்க
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையும் விண்ணப்பிக்கலாம்
அல்லது அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்
அரசு இதழை எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ்பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம்உரிய நபருக்கு அனுப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), அவர்கள்,
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002.
விண்ணப்ப படிவம் மாதிரி:
பெயர் மாற்ற படிவம் ஆங்கிலம்
பெயர் மாற்ற படிவம் தமிழ்
மத மாற்ற பெயர் மாற்றம் படிவம்
Tags: முக்கிய செய்தி