மாயமான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
இந்தோனேஷியாவில் மாயமான 62 பேருடன் மாயமான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஸ்ரீவிஜயா ஏர் என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம்ஜகார்த்தாவில் இருந்து போன்டியாக்கு, புறப்பட்டது ஆனால் விமானம் புறப்பட்ட 44 நிமிடங்களில் அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு திடிரென துண்டிக்கப்பட்டது இதனால் பரபரப்பானது
மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புப் பணிகள் குழுவினர் ஈடுபட்டனர். அதில், ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்களும், மனித உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது உறுதியானது.
இந்நிலையில் தற்போது விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கைகளில், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
The location of the Sriwijaya Air SJ-182 Black Box aircraft was found
— ᴮᴱ Caturday⁷ (@funnylillac) January 10, 2021
Thanks GOD 😭🙏#SJY182 pic.twitter.com/IaZz5FEYMW
Tags: வெளிநாட்டு செய்திகள்