Breaking News

BREAKING என்ன ஆச்சு கூகுளுக்கு.? உலகம் முழுவதும் YouTube சேவை முடங்கியது

அட்மின் மீடியா
0

சர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுக்க  கூகுள் ஜிமெயில், பிளேஸ்டோர், யூடியூப் என கூகுள் நிறுவனத்தின் செயலிகள் முடங்கியுள்ளன.கூகுள் பிளே ஸ்டார், ஜிமெயில், யுடியூப், கூகுள் பே உள்ளிட்ட கூகுள் செயலிகள் கடந்த சில நிமிடங்களாக செயல்படவில்லை. 

கூகுளின் சில வலைத்தளங்களும் முடங்கியுள்ளன.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து யுடியூப் நிறுவனம், 'யுடியூப் செயலியில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதை அறிவோம். இதுகுறித்து எங்களது குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் பிரச்னை குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.





 

இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் பார்க்க முடியவில்லை.

சேவையில் தடங்கல் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய யூடியூப் தனது தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. பின்  சுமார் 40 நிமிடம் கழித்து கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது

 

 

 

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback