விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் லைட் அடித்து காரில் கொள்ளை முயற்சி எனப் பரவும் வீடியோ உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சினிமா பாணியில் அரங்கேறிய இந்த கொள்ளை முயற்சி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் திண்டிவனத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் தமிழகத்தில் நடக்கவில்லை என தமிழக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது அதில்.....
காவல் துறை எச்சரிக்கை!. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி நெடுஞ்சாலை பகுதியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது என பரவும் வீடியோ போலியானது. வாகன ஓட்டிகள் எவ்வித அச்சமுமின்றி வாகனத்தை இயக்கலாம். இதுபோன்று போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் காவல்துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் ” என வைரலாகும் வீடியோவின் புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளனர்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி