#BigBreaking || பொங்கல் பரிசு 2500 ரூபாய்: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு.!
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம், புயல், கன மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல இன்னல்களை கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு ரூபாய் 2500 ரூபாய், முழுக் கரும்பு 1, பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு வழங்க முடிவு செய்து, அதற்கான அரசாணை பிறப்பித்தது.
மேலும், தமிழக முதல்வர் கடந்த வாரம் இந்த பொங்கல் பரிசை தொடங்கி வைத்துள்ளார். இந்த பொங்கல் பரிசுக்கு உண்டான டோக்கன்களை தமிழக அரசு, அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக, வீடு வீடாக சென்று வழங்கி வருகிறது. இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தின் படி ரேஷன் அட்டைதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், இந்த டோக்கன் விநியோகத்திற்கு அதிமுகவினர் தங்களது புகைப்படங்களையும் அதிமுக நிர்வாகிகள் வைத்து வழங்கப்படுவதாக திமுக சார்பில் குற்றச்சாட்டு வைத்து. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்கு ஒன்றையும் திமுக சார்பில் தொடர்ந்துள்ளனர்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்