உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் கட்டாய மத மாற்ற சட்டம்... 5 ஆண்டுகள் சிறை
அட்மின் மீடியா
0
மத்தியப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டது.
இனி இந்த சட்டப்படி யாராவது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்