நடுங்கும் குளிரில்..டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 31 வது நாளாக தொடர்கின்றது
அட்மின் மீடியா
0
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 31 ஆவது நாளாக தொடா் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 30 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் பல ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டு வருவதால் ரயில்வே துறைக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்