Breaking News

FACT CHECK: பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வலம் வீடியோ உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  முகமது நபி அவர்களை அவமதிக்கும் வகையில் கார்ட்டுன் வரைந்த பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்தது தொடர்பாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட செச்சனிய இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

முகமது நபி ஸல் அவர்களை கார்டூன் மூலம்  கேலிச் சித்திரம் வரைந்த  பிரான்சில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை செய்த ரஷ்யாவின் செச்செனியா பகுதியிலிருந்து அகதியாக பிரான்சுக்கு வந்த அப்துல்லாக் அயூயெடோவிச் அன்சோரோவ் என்ற இளைஞரை பிரான்ஸ் போலீசார் சுட்டுக் கொன்றனர்.  செச்சன்யா என்பது ரஷ்ய நாட்டின் கீழ் உள்ள ஒரு பகுதியாகும். 


போலிஸார் சுட்டு கொன்ற அவர் உடல்  பிரான்சில் இருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டு அவருக்கு இறுதி ஊர்வலம் நடந்ததாக செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை

ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது

ரஷ்ய ராணுவ அதிகாரி யூரி புடனோவ் என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்து சிறை தண்டனை அனுபவித்து வந்த யூசுப் டெமிர்கானோ என்பவர் அவர் உடல்நலக் குறைவு காரணமாக இறந்த பின் அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்ற வீடியோ அது


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback