தமிழகம் - ஆந்திரா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி
நவ.25 முதல் நவம்பர் 25ம் தேதி முதல் தமிழகம் - ஆந்திரா இடையே பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் மாநிலங்களுக்கு இடையேயான அத்தியாவசிய சேவைகள் தவிர பிற போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கின் போது தடை விதிக்கப்பட்ட, மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை மீண்டும் துவங்க, மத்திய அரசு செப்டம்பர் 7ல் அனுமதித்தது.
இந்நிலையில் நவம்பர் 25ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு தனியார் மற்றும் பொது பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இரு மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்