Breaking News

அபராதமும் இன்றி ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேற விரும்பும் நபர்கள் ஆனலைனில் விண்ணப்பிக்க

அட்மின் மீடியா
0

ஓமான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறும் பட்சத்தில் எந்தவொரு அபராதமும் இன்றி  டிசம்பர் 31 வரை நாட்டை விட்டு வெளியேறலாம் என்று ஓமான் தொழிலாளர் அமைச்சகம் அறிவிப்பு



காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் பயண ஆவணங்களை புதுப்பிக்க ஓமானில் உள்ள தங்கள் நாடுகளின் தூதரகங்களுக்குச் சென்று, பின்னர் அவர்கள் ஓமானை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகளை இறுதி செய்ய மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தொழிலாளர் அமைச்சக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் 

அதனை தொடர்ந்து,  பயண ஆவணங்கள், பயண டிக்கெட்டுகள் மற்றும் PCR சான்றிதழ், அத்துடன் அவர்கள் செல்லவிருக்கும் நாட்டில் தேவைப்படும் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் 

இந்த சலுகையில்  எந்த அபராதமும் இன்றி ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேற விரும்பும் நபர்கள்  ஆன்லைனில் கீழ் உள்ள லின்ங்கில் விண்ணப்பிக்கலாம்


 https://www.manpower.gov.om/ManpowerAllEServices/Details/Registration-for-Departure-within-the-Grace-Period-306


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback