இன்று முதல் மக்காவில் உம்ரா செய்ய வெளிநாட்டினருக்கு அனுமதி
அட்மின் மீடியா
0
இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் உம்ரா செய்வதற்கு வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி அளித்துள்ளது சவுதி அரேபியா அரசு.
கொரானா வைரஸ் பரவலை தடுக்க வெளிநாட்டு பயணிகளை மக்காவில் உமரா செய்ய கடந்த 7 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த தடையை தற்போது தளர்த்தியுள்ளது
முதற்கட்டமாக 10,000 வெளிநாட்டு யாத்ரீகர்கள் உம்ரா செய்வதற்கு மெக்காவுக்கு வரவுள்ளார்கள்.
மேலும் உமரா வரும் வெளிநாட்டினர் அனைவரும் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடல்நிலை கண்காணித்த பின்னரே மெக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துணை அமைச்சர் அமர்-அல்-மத்தா தெரிவித்துள்ளார்.
Tags: மறுப்பு செய்தி