Breaking News

ஹஜ் பயணம் செல்வோருக்கான விமானங்களை சென்னையில் இருந்து இயக்கவேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

அட்மின் மீடியா
0

2021-ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஹஜ் பயணமாக சவுதி அரேபியா செல்வர். 

இதற்கு வசதியாக சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து விமான சேவைகள் இயக்கப்படுவது வழக்கம். 

நடப்பு ஆண்டில் கரோனோ காரணமாக புனித ஹஜ் பயணம் அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்திற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதில் பல்வேறு தகவல்களோடு, புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி அக்டோபர் 10 எனவும், ஹஜ் விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுவதற்குப் பதிலாக கேரள மாநிலம் கொச்சியில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கொச்சியில் இருந்து செல்வது சற்று சவாலானது என்றும், முதியவர்கள் உள்ளிட்டோர் அதிகம் சிரமப்படுவார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்


Tags: மார்க்க செய்தி

Share this