Breaking News

தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் 5 பேருந்து மையங்களில்இருந்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

தீபாவளிக்கு நவ.11,12,13 தேதிகளில் 5 பேருந்து மையங்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள்  முழு விவரம்

 

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்

 

கே.கே. நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலைத்தில் இருந்து

 

ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்

 

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் 

 

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அண்ணா பேருந்து  நிலையத்தில் இருந்து செல்லும்

 

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலைத்தில் இருந்து

 

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்

 

பூந்தமல்லி பேருந்து நிலைத்தில் இருந்து

 

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்

 

கோயம்பேடு பேருந்து நிலைத்தில் இருந்து

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்


Tags: தமிழக செய்திகள்

Share this