Breaking News

லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் புதிய சட்டம்... 5 ஆண்டுகள் சிறை தண்டனை... மத்தியப் பிரதேச அமைச்சர் தகவல்..

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மாநில சட்டப் பேரவையில் “லவ் ஜிஹாத்” மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் லவ் ஜிஹாத் சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

 


திருமணத்திற்காக மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. மேலும், அவ்வாறு திருமணத்தின் போது மதம் மாறுவது செல்லாது எனவும் உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடக போன்ற மாநிலங்கள் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தன. 

இந்நிலையில், அதேபோன்ற சட்டம் மத்தியப்பிரதேச மாநிலத்திலும் கொண்டுவரப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போபாலில் பேசிய அவர், "லவ் ஜிகாத் மூலம் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருகிறது. இதைத்தடுக்க அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த சட்டத்தின்படி பலவந்தமாக திருமணம் செய்தல், திருமணத்தின் முலம் மோசடி செய்தல் அல்லது ஒருவரைத் மோசடி மூலம் திருமணத்திற்கு தூண்டுதல், மத மாற்றத்திற்காக திருமணம் செய்தல் ஆகியவை சட்டப்படி செல்லாது அறிவிக்க இந்த சட்டம் இருக்கும். 

இந்த மசோதாவின் பிற விதிகள், வேறுவேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நடைபெறும் திருமணத்தை நடத்துவதற்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும். 

மேலும் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டப்பிரிவுகள் வரையறுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback