Breaking News

பெரம்பலூரில் கிடைத்தவை டைனோசர் முட்டைகள் அல்ல.. ஆய்வில் புதிய தகவல் !

அட்மின் மீடியா
0
பெரம்பலூர் அருகே குன்னம் ஏரியை ஆழப்படுத்தும் போது ராட்சத முட்டை வடிவிலான உருண்டைகள் கண்டறியப்பட்டது.அவை  டைனோசர் முட்டையாக இருக்கும் என தகவல் பரவியது. 



மேலும் அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் அவை டைனோசர் முட்டை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

அதாவது அவை கடல் வாழ் உயிரினங்களின் படிம பாறைகள் என்று திருச்சி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் நத்தை போன்ற கடல்உயிரினங்களின் படிமங்கள் மீது அம்மோனைட் படிவதே இது போன்ற பாறைகள் ஏற்பட காரணம் என தெரிவித்த அவர், குன்னம் பகுதியில் அம்மோனைட் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குன்னம் பகுதியில் டைனோசர் முட்டை புதைந்திருப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. ஆனால் அவை டைனோசர் முட்டை அல்ல என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback