ஹஜ் யாத்திரைக்கு சவூதி அரசு அனுமதித்தால் இந்திய அரசு இறுதி முடிவெடுக்கும்
அட்மின் மீடியா
0
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது என்பது இஸ்லாம் மாா்க்கத்தின் கடமைகளில் ஒன்று
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் உள்ள காபாவிற்க்கு அவா்கள் சென்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரானா காரணமாக ஹஜ் யாத்திரை நிறுத்தப்பட்டது
இந்நிலையில் மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தலைமையில் ஹஜ் புனிதப் பயண ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சா்
2021-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் ஜூன் - ஜூலை மாதங்களில் அனுமதிக்கப்பட உள்ளது. சவூதி அரேபிய அரசு இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னா், இதற்கான விண்ணப்பத்தைச் சமா்பிப்பதற்கான அறிவிப்பை இந்திய ஹஜ் கமிட்டி உள்பட பிற புனிதப் பயண ஏற்பாட்டாளா்கள் வெளியிடுவார்கள் என்றும் சவூதி அரேபிய அரசு மற்றும் இந்தியா சாா்பில் தேவையான கரோனா வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னரே, இந்தப் புனிதப் பயணம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி