Breaking News

நம்பர் பிளேட்டுகள் குறித்த புதிய விதிமுறைகள் தெரிந்து கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகள் குறித்த புதிய விதிமுறைகளை  இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளஅறிவிப்பில்

 


 டூவீலர்

அதன்படி 70 சிசி திறன் இன்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்கள் முன் நம்பர் பிளேட்டில் எழுத்து உயரம் குறைந்தது 15 மி.மீ, தடிமன் 1.2 மி.மீ, இடைவெளி 2.5 மி.மீ இருக்க வேண்டும். 


அனைத்து இருசக்கர வாகனங்களின் பின்பக்கம் நம்பர் பிளேட்டில் எழுத்தின் உயரம் 35 மி.மீ, அகலம் 7 மி.மீ., நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும்

 


 

ஆட்டோ

ஆட்டோக்களில் எழுத்து உயரம் 40 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5 மி.மீ உடையதாகவும், 

 

மேலும்  500 சிசிக்கும் குறைவாக உள்ள 3 சக்கர வாகனங்களில் எழுத்து உயரம் 35 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5மி.மீ உடையதாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற அனைத்து வாகனங்களிலும் 

 

எழுத்து உயரம் 65மி.மீ, தடிமன் 10 மி.மீ, இடைவெளி 10 மி.மீ அளவில் இருக்க வேண்டும்.

 

மேலும் தனிப்பட்ட உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், 

வர்த்தக வாகனங்களின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும் இருக்கவேண்டும்


மேலும் அனைத்து வகையான வாகனங்களிலும் நம்பர் மற்றும் எழுத்துக்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback