தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யபட்டுள்ளது
அட்மின் மீடியா
0
கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது
ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் இதுவரை பல மாவட்டங்களில் ரத்து செய்யப்படுவதாக அந்த அந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளது
செங்கல்பட்டு ,திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், திருவள்ளூர், திருநெல்வேலி, மதுரை திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
#JUSTIN தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு!#NewsJ | #EdappadiPalanisamy | #TNGovt | #Corona |
— NewsJ (@NewsJTamil) October 1, 2020
Tags: தமிழக செய்திகள்