சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம் 30 நாட்களுக்கு ரூ999 மட்டுமே
சைக்கிள் ஷேரிங் திட்டத்தில் ரூ999 செலுத்தி ஒரு மாதம் சைக்கிள் எடுத்து செல்லலாம் ஸ்மார்ட் பைக் நிறுவனம் அறிமுகம்
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிள் ஷேரிங் திட்டம் தற்போது மீண்டும் தொடங்கபட்டுள்லது
மேலும் இந்த திட்டத்தின் கீழ் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள் வாடகை அடிப்படையில் சைக்கிளை வீட்டிற்கு எடுத்து செல்லும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி
- 7 நாட்களுக்கு ரூ299,
- 15 நாட்களுக்கு ரூ599,
- 30 நாட்களுக்கு ரூ999
கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் சேர விரும்பும் பொதுமக்கள் 044-26644440 என்ற எண்ணிக்கை தொடர்பு கொண்டு முன்பு செய்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் பைக் நிறுவன அதிகாரிகள் வீட்டிற்கே வந்து சைக்கிளை வழங்குவார்கள்.
பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்தி சைக்கிளை பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது ஸ்மார்ட் பைக் ஷோரூமுக்கு சென்று ஸ்மார்ட் பைக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அத்ன் மூலம் பெற்றுகொள்ளலாம்
Tags: முக்கிய செய்தி