Breaking News

FACT CHECK: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் உள்ள மசூதிக்குள் உள்ள கோவில் என பரப்படும் வதந்தி

அட்மின் மீடியா
0

 

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் உள்ள மசூதி ஒன்றுக்குள் மறைக்கப்பட்டிருந்த கோவில் என்று ஒரு பிரம்மாண்ட கோவில் படம் ஒன்றை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இந்த புகைப்படம் 2016ம் ஆண்டு போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டது ஆகும், 

அந்த புகைபடத்தை எடிட் செய்தவருடைய பெயர் Chandra Colourist  அந்த போட்டோவில் அவர் பெயர் தெளிவாக போடபட்டுள்ளது. 

மேலும் அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் இது எனது டிஜிட்டல் படைப்பு என விளக்கமும் அளித்துள்ளார் 

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.facebook.com/photo.php?fbid=1736862236595417&set=a.1380697885545189

 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback