Breaking News

வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம்

அட்மின் மீடியா
0
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 
 
 

 
சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களும் இணைய வசதி இல்லாத மாணவர்கள், வீடுகளில் இருந்தே தேர்வு எழுதி விடைத்தாள்களை தபால் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்துகின்றன. 
 
 
இந்நிலையில், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


ஆன்லைன் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து, இணைய மூலம் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து, பின்னர் A4 தாளில் விடைகளை எழுதி, விடைத்தாள்களை இணையதளத்தில் Upload செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன. 

வீடுகளில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் விடைத்தாள்களை தபால் மூலம் அவர்களின் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback