விமானத்துக்குள் இருந்து புகைப்படம் ,வீடியோ எடுக்க தடை: டிஜிசிஏ எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
விமானங்களில் பயணிக்கும் போது விமானத்தில் இருந்தவாறு விமான நிலைய வளாகத்தை புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ எடுப்பது மற்றும் விமானத்தின் உள் பகுதியில் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது போன்ற விதிகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிவில்விமானப் போக்குவரத்து இயக்குனரகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில்
விமானத்துக்குள் இருந்து பயணிகள் விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடை விதித்துள்ளது
மேலும் விமான இயக்குனரகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று வேண்டுமானால் புகைப்படமோ வீடியோ எடுக்கலாம் என்றும், ஆனால் விமானங்கள் தரையிறங்குவது மற்றும் புறப்படுவதை புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்க அனுமதியில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகள் மீறபட்டால் அந்த விமானத்தை இயக்குவதற்கு 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும், விமான போக்குவரத்து இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.
— DGCA (@DGCAIndia) September 12, 2020
Tags: தமிழக செய்திகள்