டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேரில் ஒருவராக பில்கிஸ் பாட்டி...
டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேரில் ஒருவராக பில்கிஸ் பாட்டி...
டில்லி ஷாகின் பாக் பகுதியை சேர்ந்தவர் 82 வயது மூதாட்டி பில்கிஸ் இவர் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தினமும் கலந்து கொண்டு போராடிய வீரப்பெண்மணிதான் இந்த பில்கிஸ். மேலும் இவர் ஷாஹீன் பாக் கி தாதி என்று பிரபலமாக அறியப்பட்டார்.
மேலும் இந்த இதழலில் உலகளவில் சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அலிபாபா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஜாங், மற்றும் பிரதமர் மோடி, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஹெச்ஐவி ஆராய்ச்சியாளர் ராவீந்தர் குப்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
டைம்ஸ் இதழில் வெளிவந்த கட்டுரை
https://time.com/collection/100-most-influential-people-2020/5888255/bilkis/
Tags: இந்திய செய்திகள் தமிழக ஷாஹீன்பாக்