FACT CHECK: பிரணாப் முகர்ஜி உயிருடன் உள்ளார் வதந்திகளை நம்பாதீர்கள்: மகன் தகவல்
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும் இன்று சற்றுமுன் ஆழ்ந்த இரங்கல்.. முன்னாள் இந்திய குடியாரசுதலைவர் பிரணாப்முகர்ஜி அவர்கள் காலமானார்.. வீர வணக்கம். என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டி காரணமாக, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்
மேலும் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் எனது தந்தை உயிருடன் இருக்கிறார் வதந்திகளை நம்ப வேண்டாம் ” என பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தட்னது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
My Father Shri Pranab Mukherjee is still alive & haemodynamically stable !— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020
Speculations & fake news being circulated by reputed Journalists on social media clearly reflects that Media in India has become a factory of Fake News .
Tags: FACT CHECK மறுப்பு செய்தி